மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் - இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி
ஈரான் ஜனாதிபதி (President of Iran) இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தகவலை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உறுதிப்படுத்தி உள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கு விஜயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அடுத்த வாரம் திறந்து வைக்கப்படவுள்ளது.
உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200கிமீ தொலைவில் அமைந்துள்ளது. வெளிநாடுகளில் ஈரானிய ஒப்பந்ததாரர்களால் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய திட்டங்களில் இந்தத் திட்டம் ஒன்று.
அவரது விஜயத்தின் போது உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோமீட்டர் நீர் கடத்தும் சுரங்கப்பாதையும் ஏப்ரல் 24 அன்று திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.