ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது! ஈரானின் பாராளுமன்ற தலைவர் ஆதங்கம்

United Nations Iran World
By Fathima Jan 30, 2026 08:39 AM GMT

ஈரானின் பாராளுமன்ற தலைவர் மொஹம்மத் பகர் காலிபாஃப், (Mohammad Bagher Ghalibaf) ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (IRGC) “தீவிரவாத அமைப்பு” என்று அறிவித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் “தீவிரவாதத்தை ஆதரிக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

IRGC உலகிலேயே மிக வலுவானதும், மிகச் செயல்திறன் கொண்ட தீவிரவாத எதிர்ப்பு படைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

தீவிரவாத எதிர்ப்பு படை

ஐஎஸ்ஐஎஸ்(ISIL) தீவிரவாதத்தை எதிர்த்து போராடிய IRGC-ன் சாதனைகளை மறுப்பவர்கள், தீவிரவாதிகளின் பக்கம் நின்றவர்களே என்றும் அவர் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியம் தீவிரவாதத்தை ஆதரிக்கிறது! ஈரானின் பாராளுமன்ற தலைவர் ஆதங்கம் | Iranian Parliament Speaker Mohammad Ghalibaf

தீவிரவாதத்தை ஆதரிப்பது ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னர் வருத்தத்தையே ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை வன்முறையாக அடக்கியதற்கான பதிலாக, வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அதே நேரத்தில், உள்துறை அமைச்சரை உட்பட பல ஈரானிய அதிகாரிகள் மீது புதிய சுற்று தடைகளையும் அறிவித்தது.