ஈரானை உலுக்கிய போராட்டங்கள்! பின்னணியிலுள்ள வெளிநாட்டு சக்திகள் குறித்து மசூத் பெசெஷ்கியான் தகவல்

United States of America Iran Iran President
By Fathima Jan 31, 2026 02:30 PM GMT
Fathima

Fathima

சமீபத்தில் நாட்டை உலுக்கிய போராட்டங்களின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐரோப்பா நாடுகள் மக்களை தூண்டிவிட்டு பதற்றத்தை உருவாக்கியதாக ஈரானின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

இந்த இயக்கத்துடன் சேர்த்து சில நிரபராத மக்களுக்கு அவர்கள் வசதிகள் செய்து கொடுத்து, அவர்களை தெருக்களில் இறக்கி, இந்த நாட்டை சிதைக்க, மக்களிடையே சண்டை மற்றும் வெறுப்பை உருவாக்க, பிரிவினையை ஏற்படுத்த தூண்டினர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வெளிநாட்டு சக்திகள்

இது குறித்து அவர் ஊடகங்களிடம் கூறும் போது, எந்த சாதாரண போராட்டத்திலும் மக்கள் துப்பாக்கிகளை எடுக்க மாட்டார்கள், இராணுவப் பணியாளர்களை கொல்ல மாட்டார்கள், ஆம்புலன்ஸ்களையும் சந்தைகளையும் தீ வைத்து எரிக்க மாட்டார்கள்.

ஈரானை உலுக்கிய போராட்டங்கள்! பின்னணியிலுள்ள வெளிநாட்டு சக்திகள் குறித்து மசூத் பெசெஷ்கியான் தகவல் | Iran Usa Conflict

நாம் போராட்டக்காரர்களுடன் அமர்ந்து, அவர்களின் வார்த்தைகளையும் கவலைகளையும் கேட்டு, அவற்றைத் தீர்க்க வேண்டும், கேட்க நாம் தயாராக இருக்கிறோம்.

இது வெறும் சமூக போராட்டம் மட்டுமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். வெளிநாட்டு சக்திகள் எங்கள் பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொண்டன, எங்களைத் தூண்டின மற்றும் எங்கள் சமூகத்தை பிரிக்க முயன்றன என்று குற்றம்சாட்டினார்.

சமீபத்திய போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததை ஈரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு, உயிரிழப்பு எண்ணிக்கை 3,000-ஐ கடந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் மனித உரிமை அமைப்புகள், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்றும், அது பத்தாயிரக்கணக்கில் இருக்கலாம் என்றும் எச்சரிக்கின்றன.