ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் உறுதியாகவில்லை
ஈரானிய ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானிய ஜனாதிபதி ஈப்ரஹிம் ரயிஸின் இலங்கை விஜயம் தொடர்பில் நேற்று வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி நாட்டுக்கு விஜயம் செய்வார் என்ற நம்பிக்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிவவிகார அமைச்சுப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்டுள்ள உமா ஓயா திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்க ஈரானிய ஜனாதிபதி இலங்கை விஜயம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ஜனாதிபதியும் அவரது பாரியாரும், புதல்வியும் நிகழ்வில் பங்கேற்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கபபட்டிருந்தது.
உமா ஓயா திட்டத்திற்காக 529 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
ஈரானியில் தற்பொழுது நிலவி வரும் பதற்ற நிலைமையினால் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வாரா என்பது சந்தேகமே என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.