ஈரான் ஜனாதிபதி தேர்தல் : இரு பிரதான வேட்பாளர்களிடையே கடும் போட்டி
Iran
World
By Rukshy
ஈரானில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கடும்போக்காளர் சயீத் ஜலீலிக்கும் மிதவாத வேட்பாளர் மசூத் பெசெஷ்கியனிற்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டு மில்லியனிற்கு மேற்பட்ட வாக்குகள் தற்போது வரை எண்ணப்பட்டுள்ள நிலையில் குறித்த இருவரும் 40 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டாம் சுற்று தேர்தல்
இந்நிலையில், இரண்டு வாக்காளர்களும் 50 வீத வாக்குகளை பெறவிட்டால் வெள்ளிக்கிழமை இரண்டாம் சுற்று தேர்தல் இடம்பெறும் என கூறப்படுகிறது.
எனினும் இந்த தேர்தலானது கடந்த மே 19ம் திகதி ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |