ஈரானில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு
ஈரான் இன்று (28) தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த நாட்டின் மிகப்பெரிய துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்புடன் நடந்ததை தொடர்ந்து இவ்வாறு துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் மட்டும் கூடுதலாக இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
துக்க தினம் அனுஷ்டிப்பு
நாட்டின் மிகப்பெரிய வணிகத் துறைமுகத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், பலர் இரத்த தானம் செய்ய மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஈரானிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்கள் பாதுகாப்பு உடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |