இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ போதைப்பொருட்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Police spokesman Sri Lanka Police Sri Lankan Peoples Drugs
By Rakshana MA Apr 28, 2025 05:09 AM GMT
Rakshana MA

Rakshana MA

சட்ட நடவடிக்கைகள் முடிவடைந்த 494 கிலோகிராம் 48 கிராம் ஹெராயின் இன்று (28) அழிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது INSEE சிமென்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான எரியூட்டியில் போதைப்பொருள் கையிருப்பு அழிக்கப்படும் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சரக்குகள் புத்தளத்தின் பாலாவியா பகுதிக்கு உயர் பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த இரு மாணவிகள்

கிண்ணியாவில் மருத்துவத்துறையில் சாதனை படைத்த இரு மாணவிகள்

போதைப்பொருள் அழிப்பு

இன்று (28) அழிக்கப்படவுள்ள போதைப்பொருளில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி அன்று நடத்திய கூட்டுச் சோதனையில் 6 வெளிநாட்டினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 250 கிலோ ஹெராயினும், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி அன்று நடத்திய சோதனையில் 7 வெளிநாட்டினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 243 கிலோ ஹெராயினும் அடங்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ போதைப்பொருட்கள்! வெளியான அதிர்ச்சி தகவல் | Sri Lankan Police Action To Destroy Drugs

தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

தொலைபேசி சின்னம் காலாவதி விட்டது : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்

கல்முனையின் மாற்றத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசேட திட்டம்

கல்முனையின் மாற்றத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசேட திட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW