போரில் வெற்றியை அறிவித்த ஈரான்! போர் நிறுத்தத்தை ஏன் ஒரு வெற்றியாக கருதுகிறது?

Iran World
By Vinoja Apr 08, 2026 03:19 PM GMT
Vinoja

Vinoja

ஈரான் அரசும் அரசு ஊடகங்களும் அந்நாட்டு மக்களும் போர் நிறுத்தத்தை ஆட்சிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடி வருகின்றனர்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் போரில் ஈரான் தனது இலக்குகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் அடைந்துவிட்டதாகவும், ''எதிரி ஒரு வரலாற்றுத் தோல்வியை'' சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரில் வெற்றியை அறிவித்த ஈரான்! போர் நிறுத்தத்தை ஏன் ஒரு வெற்றியாக கருதுகிறது? | Iran National Security Council Statement About War

போரின் ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன எனும் நற்செய்தியை ஈரானுக்கு நாங்கள் அளிக்கிறோம்.இன்னும் போர் முடியவில்லை. வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்தப் போர் இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் மூத்த தளபதிகள் கொல்லப்படத்தில் இருந்து ஆரம்பித்தமையால்,

இது ஈரானின் ஆட்சிக்கு வாழ்வா சாவா என்ற போராட்டமாகவும், தங்களின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கான பேராகவுமே அமைய பெற்றது.

எனவே தான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போரில் தப்பிப்பிழைத்ததையே அவர்கள் வெற்றியாகக் கொண்டாடுகின்றார்கள்.