மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் அவசியம்: வெளியாகும் விடயம்
இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் அவசியம் என்ற வேண்டுகோள்கள் விடுக்கப்படுவது அவசியம் என மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
ருக்கி பெர்ணாண்டோ தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.
சனல் 4 இன் சமீபத்தைய ஆவணப்படம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள சதிதிட்டம் குறித்து பலவிடயங்களை அம்பலப்படுத்துவதுடன் பத்திரிகையாளர்கள் கொலை யுத்தகால குற்றங்கள் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஆவணதிரைப்படம்
இந்த விடயம் தொடர்பில் அரசியல்வாதிகள் இராணுவத்தின் தொடர்புகள் குறிப்பாக இனவெறி ஊழல் ஏதேச்சதிகார ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் சகாக்களான துணை இராணுவத்தினர் இராணுவத்தினர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் இடம்பெறவேண்டும் என கிறிஸ்தவ தலைவர்களும் ஏனையவர்களும் விடுத்த வேண்டுகோளை புதிய ஆவணதிரைப்படம் மீண்டும் வலியுறுத்துகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தகாலஅநீதிகள் ஏனைய பாரதூரமான குற்றங்கள் மனித உரிமைமீறல்கள் குறித்தும் இதேபோன்ற சர்வதேச விசாரணைக்கான வேண்டுகோள்கள் விடுக்கப்படவேண்டும்.
அவ்வாறான வேண்டுகோள்களை விடுக்காமல் இருப்பது கபடநாடகமாகும். மேலும் இலங்கை குறித்து கடந்தகாலங்களில் சனல் 4 வெளியிட்ட முன்னைய ஆவணப்படங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவேண்டும்.