நூற்றுக்கணக்கான இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு! வெளியான தகவல்

CID - Sri Lanka Police Dubai Sri Lanka Police Investigation France
By Mayuri Jul 23, 2024 02:29 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் 164 இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸார் சிவப்பு பிடிவிராந்தை பெற்றுள்ளதாக குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகள், போதைப்பொருள் வர்த்தகம், போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு சிவப்பு பிடிவிராந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள குற்றவாளிகள்

மேலும் இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வேறும் நாடுகளிலும் மேலும் சில குற்றவாளிகள் தலைமறைவாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நூற்றுக்கணக்கான இலங்கையர்களுக்கு எதிராக சிவப்பு பிடிவிராந்து உத்தரவு! வெளியான தகவல் | Interpol Red Notice For Lankan Criminals

கிளப் வசந்த படுகொலையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கஞ்சிபானை இம்ரான் பிரான்சில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இவருடன் குடு அஞ்சு என்ற மற்றுமொரு பாதாள உலகக் குழு தலைவரும் பிரான்ஸில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த சந்தேக நபர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டுபாய், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் பாதாள உலகக் குழுத் தலைவர்களை கைது செய்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW