சர்வதேச அளவில் அதிகரித்துள்ள இலங்கை கராம்பிற்கான கேள்வி
Sri Lanka
Sri Lankan Peoples
Export
By Rakshana MA
சந்தையில் ஒரு கிலோ காய்ந்த கராம்பின் விலை 2500 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கராம்புக்கு நல்ல கேள்வி உள்ளதாகவும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
கராம்பிற்கான கேள்வி
மேலும், ஒரு கிலோ பச்சை கராம்பின் விலை 800 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வாறு கேள்வி அதிகரித்துள்ள கராம்பு, கண்டி, மாத்தளை, கேகாலை, நுவரெலியா, மற்றும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |