கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தி முக்கிய பகுதியில் சோதனை தீவிரம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரமுகர்களுக்கான பிரிவில் சோதனைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சோதனைகளை முன்னெடுப்பதில் விசேட அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்துள்ளார்.
சோதனை நடவடிக்கை தீவிரம்
இதன்படி, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விமான நிலைய பிரமுகர்களுக்கான பிரிவை பயன்படுத்தி சிலர் தொடர்ச்சியாக சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும், அது தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.