பொலிஸ் மா அதிபருக்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு
தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பங்குதாரர்களால் 09 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று (24) இந்த உத்தரவை அறிவித்துள்ளது.
இடைக்கால உத்தரவு
இதனையடுத்து, இந்த இடைக்கால உத்தரவு நடைமுறையில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த மனு விசாரணைக்கு வரும் வரை, பிரதிவாதியான தேசபந்து தென்னகோன், பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கும், தனது அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கும், கடமைகளை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |