வங்கி வட்டி வீதம் குறித்து வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Shehan Semasinghe
By Fathima Jun 08, 2023 08:50 AM GMT
Fathima

Fathima

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது மக்களுக்கு அந்த நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால், வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் வட்டி வீதம் குறைக்கப்பட்டதில் அதிகபட்ச மதிப்பு நேற்றைய தினம் பதிவானதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 91 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் 2.5% குறைந்துள்ளதுடன் 182 நாள் திறைச்சேரி உண்டியல்களுக்கான வட்டி வீதம் சுமார் 3.4% குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.