வட்டியல்லாத மாணவர் கடன் திட்டம்! கிடைத்துள்ள அனுமதி

Ministry of Education Education
By Mayuri Sep 03, 2024 11:05 AM GMT
Mayuri

Mayuri

அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் இதற்காக சில விதந்துiராகள் முன்வைக்கப்பட்டு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல் அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்காக 2017ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் குறித்த கடன்திட்டத்தின் கீழ் அந்தந்த பாடநெறிகளுக்கான அரசுசாரா உயர் கல்வி நிறுவகங்களுக்கு செலுத்தவேண்டிய கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக திறைசேரியின் பிரதிச் செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2023.04.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வட்டியல்லாத மாணவர் கடன் திட்டம்! கிடைத்துள்ள அனுமதி | Interest Free Student Loan Scheme

யோசனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கீழ்காணும் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக்குழுவின் விதந்துரைகளுக்கமைய வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆம் கட்டத்திலிருந்து பாடநெறிக் கட்டணத்தை திருத்தம் செய்தல்,

• ஒரு வங்கிக்கு ஏற்படும் நிதி இடரைக் குறைப்பதற்கு இயலுமாகும் வகையில் மேற்குறிப்பிட்ட உத்தேசத்திட்டத்துக்காக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் மேலும் தேசிய சேமிப்பு வங்கியையும் இணைத்துக் கொள்ளல்,

வட்டியல்லாத மாணவர் கடன் திட்டம்! கிடைத்துள்ள அனுமதி | Interest Free Student Loan Scheme

• வட்டியல்லாத மாணவர் கடன் திட்டத்தின் வட்டிவீதம் 13% வீதத்திற்கும் குறைந்த சதவீதத்திற்கு மற்றும் 6மாத கால AWPLR+1% சதவீதத்திற்கமைய வருடாந்தம் மீளாய்வு செய்து நடைமுறைப்படுத்தல்

• மாணவர் கடன் திட்டத்தின் 8 ஆவது கட்டத்திலிருந்து ஒரு கட்டத்திற்கு 7,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW