இலங்கையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி!

Ministry of Education Sri Lanka Education
By Dhayani Jul 05, 2023 01:54 AM GMT
Dhayani

Dhayani

தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நேற்று முதல் (04.07.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாாணவர்களுக்கு நேற்று முதல் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்களுக்கான அரச வட்டியில்லா கடனுதவிக்கான விண்ணப்பங்களை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி! | Interest Free Loans For Students

5,000 மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு 07 அல்லது 08 வருட கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக 08 இலட்சம் வரை கடனாகப் பெற முடியும் என்பதோடு அதற்கான வட்டியை அரசே ஏற்கத் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 03 வருடம் அல்லது 04 வருடப் பட்டப் படிப்புகளை முன்னெடுக்க முடியும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW