சிவில் உடையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்: பொலிஸாருக்கு அறிவுறுத்தல்
Sri Lanka Police
By Dhayani
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில் இருக்கும் போது வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்த அறிவுறுத்தலை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுத்துள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி நாரம்மல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கிச்சூட்டில் சாரதி ஒருவர் உயிரிழந்த பின்னணியில் இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.