டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை
Dengue Prevalence in Sri Lanka
By Mayuri
நிலவும் மழையுடனான காலநிலைக் காரணமாக டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய நிலைமை உள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 34,906 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மேல் மாகாணத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்கள்
அதன்படி, மேல் மாகாணத்தில் இதுவரையில் 14, 248 பேர் டெங்கு நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தின் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற் கொண்டு டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |