உணவுப் பொதியின் விலையை குறைக்க வலியுறுத்து

Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Thahir Mar 27, 2023 07:03 AM GMT

மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறைந்துள்ள நிலையில் உணவுப்பொதியின் விலையை குறைக்கப்பட வேண்டும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆயிரத்து 300 ரூபாய்க்கும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை, தற்போது 600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றன.

பருப்பு, கிழங்கு என்பற்றின் விலைகளும் மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன நிலையில் உணவுப் பொதியின் விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.