திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’

Arvind Swamy Trincomalee India Sri Lanka Navy Ship
By Rakshana MA Aug 12, 2025 03:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ்.ரனா' திருகோணமலை துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது 147 மீட்டர் நீளம் கொண்டதுடன், 300 அங்கத்துவ குழுவினரை கொண்டுள்ளது.

மேலும், இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ.ஸ்ரீசன் பணியாற்றுகின்றார்.

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடற்படை கப்பல்

இக்கப்பல் நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதன் குழுவினர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

திருகோணமலைக்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படை கப்பல் ‘INS ரனா’ | Ins Rana Trincomalee Visit

அத்துடன் தீவில் உள்ள பல சுவாரஸ்யமான இடங்களைப் பார்வையிடவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் வியாழக்கிழமை (14) மீண்டும் இந்தியாவிற்கு திரும்பவுள்ளது.   

விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும்: முஜிபுர் ரஹ்மான்

விவாதத்தில் ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல விடயங்கள் வெளிப்படுத்தப்படும்: முஜிபுர் ரஹ்மான்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW