வெள்ளத்தால் உயிரிழந்த மாணவர்கள் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Eastern Province Floods In Sri Lanka
By Rakshana MA Dec 01, 2024 12:49 PM GMT
Rakshana MA

Rakshana MA

கிழக்கில் வெள்ளத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவின் ஆலோசனைக்கு அமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

முதற்கட்ட விசாரணை

குறித்த பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்ட போது, சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும் மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக் கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்க கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தவிர விபத்து நடைபெற்ற போது அங்கு என்ன நடந்தது யார் யார் பயணித்தார்கள் போன்ற கேள்விகள் தொடுக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்திற்குள்ளானமை யாவரும் அறிந்ததே.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி சங்கத்தினர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்ட மாணவர்களின் உடல்கள்

அத்துடன் இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புப் குழுவினரால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குறித்த சடலங்கள் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டிருந்தார்.

வெள்ளத்தால் உயிரிழந்த மாணவர்கள் : தீவிரப்படுத்தப்படும் விசாரணை | Inquiry On Madrasa Students Drowning

பின்னர் மரண விசாரணைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டன. இந்த மீட்பு நடவடிக்கையில் சடலங்களாக முகமட் ஜெசில் முகமட் சாதீர்(வயது-16), அப்னான், பாறுக் முகமது நாஸிக்(வயது-15) ,சஹ்ரான்(வயது-15),அலியார் முகமது யாசீன்(வயது-15), தஸ்ரிப், 6 மத்ரசா மாணவர்களும் உழவு இயந்திர சாரதி உதுமாலெப்பை முகமது அகீத்(வயது-17) ,பொது மகன் கல்முனை புகை பரிசோதனை நிலைய ஊழியர் அஸ்மீர் உள்ளடங்குவர்.

[IEPCFW0 ]

கிழக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

கிழக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW