இந்திய கடற்றொழிலாளர்கள் கைது விவகாரம்: போராட்டம் முன்னெடுப்பு

Indian fishermen Tamil nadu India Sri Lanka Navy Rameswaram
By Sajithra Jul 01, 2024 11:26 AM GMT
Sajithra

Sajithra

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 25 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளமையை கண்டித்து தமிழ்நாடு (Tamil Nadu) - பாம்பன் கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

இந்த போராட்டமானது, இன்று (01.07.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் சாலை பாலத்தில் இந்திய கடற்றொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

இலங்கை கடற்றொழிலாளர்கள் 

பாம்பன் வடக்கு கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து நாட்டு பகுதியில் 50இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர். 

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது விவகாரம்: போராட்டம் முன்னெடுப்பு | Inidian Fishermen Protest In Pamban Port Tamilnadu

அவர்கள் இன்று (1) அதிகாலை இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இலங்கை கடற்படையினர் 4 நாட்டு படகுகளையும் அதிலிருந்து 25 கடற்றொழிலாளர்களையும் கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இந்நிலையில், பாம்பன் பகுதி நாட்டுப்படகு கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் மற்றும் நாட்டுப்படகு கடற்றொழிலாளர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய கடற்றொழிலாளர்கள் கைது விவகாரம்: போராட்டம் முன்னெடுப்பு | Inidian Fishermen Protest In Pamban Port Tamilnadu

குறித்த கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் சாலை பாலத்தின் முகப்பு பகுதியில் அமர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த சாலை மறியலால் மதுரை - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதுடன் கைதான கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW