வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
By Fathima
வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் விரைவான தீர்மானம் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் குழுவின் கூட்டம் இடம்பெற்றபோது இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் எதிர்பார்த்த வருமானத்தை சுங்கத்தினால் பெற முடியவில்லை என சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கடன் உதவி முறையின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை சேமிப்பதன் மூலம் சுங்க வருமானத்தை அதிகரிக்க முடியும் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.