சமுர்த்தி கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை தற்போது சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொண்டிருக்கும் குடும்பங்களில் 33% குடும்பங்கள் இந்த கொடுப்பனவை பெற தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக் கணக்குகளுக்கான நாடாளுமன்ற குழு ஏப்ரல் 25 ஆம் திகதி COPA குழு நாடாளுமன்றத்தில் கூடிய போது இதனை தெரிவித்துள்ளது.
2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தற்போதைய செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக இது வெளிப்படுத்தப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போது, மொத்தமாக 449,979 குடும்பங்கள் சமுர்த்தி மானியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சமுர்த்தி பயனாளிகளை தெரிவு செய்வதில் முறைசாரா தன்மை காணப்பட்டதாக தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |