புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள்

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples Money Income Tax Department
By Rakshana MA Feb 16, 2025 04:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாது என்று  நிதி அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதீட்டில் பாதுகாப்பு அமைச்சக ஒதுக்கீடுகள் 442 பில்லியன் ரூபாய்களாக உள்ளன, இதில் 382 பில்லியன் தொடர்ச்சியான செலவீனங்களுக்காகவும், 60 பில்லியன் ரூபாய்கள் மூலதனச் செலவீனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி தேவைகளுக்கு ஏற்ப வரவு செலவுத் திட்டத்தின் விபரங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

அம்பாறையில் சுத்தம் செய்யப்பட்ட புத்தங்கல குப்பை மலை

முதலாவது வரவு செலவுத் திட்டம்

இலங்கையின் நாடாளுமன்றில் நாளை(17) சமர்ப்பிக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகளையும், அத்துடன் அரச வேலைகளையும் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய வரிகள் தொடர்பில் வெளியான தகவல்கள் | Information Released Regarding New Taxes

எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட அளவுக்குள் இவை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அரசுத் துறையின் ஆட்சேர்ப்புகள் பாதீட்டுக்கு பின்னர் ஆரம்பிக்கும். ஆனால் அவை அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு: எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள்

வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு: எச்சரிக்கும் இறக்குமதியாளர்கள்

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

தர்கா வழிபாடு எதற்காக என்று தெரியுமா..?

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW