காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

Sri Lanka Sri Lankan Peoples Air Pollution
By Rakshana MA Feb 11, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவுடன், வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப்பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 

நாடு முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை (11) காற்றின் தர சுட்டெண் 58 தொடக்கம் 108க்கு இடையில் இருக்கும்.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

காற்றின் தர சுட்டெண் 

மேலும், இது பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவைக் குறிப்பதோடு, நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையை குறிக்கின்றது.

காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்கள் | Information Released Regarding Air Pollution

இதன்படி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் சிறிதளவு ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் வேளைகளில், குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 1.00 மணி முதல் 2.00 மணி வரை காற்றின் தரச் சுட்டெண் ஆரோக்கியமற்று காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபர்! முன்னெடுக்கப்பட்ட விசாரணை

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபர்! முன்னெடுக்கப்பட்ட விசாரணை

இனி ஒன்றரை மணிநேரம் மின்தடை! வெளியான தகவல்

இனி ஒன்றரை மணிநேரம் மின்தடை! வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW