பேரழிவைத் தொடர்ந்து சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்
சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது.
இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய குப்பைகளைச் சேகரிப்பதிலோ அல்லது கழிவு முகாமைத்துவ அமைப்பிலோ குறிப்பிடத்தக்க சவால்கள் எதுவும் எழவில்லை என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலித்தீன் கழிவுகள்
எனினும், இந்தத் தாக்கங்கள் இன்னும் உருவாகவில்லை என்றாலும், மீட்புப் பணிகள் தொடரும்போது இத்தகைய கழிவுகளின் 'இரண்டாம் அலை' ஏற்படும் என அமைச்சு எதிர்பார்ப்பதாக, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயக்கொடி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதாவது, மக்கள் இடம்பெயர்ந்து மீண்டும் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது, கணிசமான அளவு பிளாஸ்டிக் கழிவுகள் சூழலில் வந்து சேரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான விதிமுறை
இருந்தபோதிலும், இந்த அவசரத் தேவைகளுக்கு எதிராகப் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான கடுமையான விதிமுறைகளைச் சமநிலைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

"பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து நாம் கடுமையான முடிவுக்கு வர முடியாது. மக்களைப் பசியுடனும், தாகத்துடனும் விட்டுவிட முடியாது," என்று அண்டன் ஜயக்கொடி கூறியுள்ளார்.
உடனடி நெருக்கடி தணிந்தவுடன், கைவிடப்பட்ட பொருட்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.