சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் வெளியாகிய தகவல்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று(27.06.2024) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆரம்பிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள்
இதேவேளை சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சை கடந்த மாதம் 06 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் குறித்த பரீட்சையில் 452,979 பரீட்சார்த்திகள் தோற்றியதுடன் நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் பரீட்சைகள் இடம்பெற்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |