தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய முடிவுகள்!

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Shehan Nov 15, 2025 10:06 AM GMT
Shehan

Shehan

இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனங்களுக்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, சஞ்சீவ தர்மரத்னவை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

லலித் பத்திநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றி மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதவிகளில் மாற்றம்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை இலங்கை பொலிஸ் நிர்வாகப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டு அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய முடிவுகள்! | Information Of National Police Commission

தேசிய பொலிஸ் ஆணையத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

லலித் பத்திநாயக்க பிற மூத்த அதிகாரிகள் பற்றிய தவறான தகவல்கள் சமூக ஊடகங்களுக்கு வழங்கியதாகவும், மிகவும் இரகசியமான உள்ளக பொலிஸ் கோப்புகளை வெளி தரப்பினருக்கு வழங்கியுள்ளதாகவும் குறித்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.