பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!
2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தைக்கப்பட்ட சீருடை
பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன நாட்டிலிருந்து சீருடை துணி வழங்கப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |