ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்! வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Foreign Employment Bureau Job Opportunity
By Rakshana MA Mar 17, 2025 05:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்காலத்தில் தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த நாடுகளில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.

நேற்று (15) நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் தென் கொரியாவில், இலங்கையர்களுக்கு 7,600 வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக அஜித் கிஹான் கூறியுள்ளார்.

ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்! வெளியான தகவல் | Information About Overseas Job Opportunities

இதேவேளை ஜப்பானில் சுமார் 9,300 வேலை வாய்ப்புகளையும், இஸ்ரேலில் சுமார் 15,900 வேலை வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்டுமானம், மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சேவைத் துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.  

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தீர்வு கிட்டுமா??

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு தீர்வு கிட்டுமா??

கிழக்கில் தீவிரவாதக்குழுக்கள் என்று சர்வதேசத்தை திசைதிருப்பும் முயற்சியா..சபையில் ரவூப் ஹக்கீம்

கிழக்கில் தீவிரவாதக்குழுக்கள் என்று சர்வதேசத்தை திசைதிருப்பும் முயற்சியா..சபையில் ரவூப் ஹக்கீம்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW