சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை! வெளியான அறிவிப்பு

Bandaranaike International Airport Sri Lanka Airport Weather
By Fathima Nov 27, 2025 05:40 AM GMT
Fathima

Fathima

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த மழை வீழ்ச்சி தொடர்பில் முழு இலங்கைக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கைகள் 

அத்துடன் பலத்த காற்று, மண்சரிவு மற்றும் வெள்ள நிலைமை தொடர்பிலும் தொடர்ச்சியாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை! வெளியான அறிவிப்பு | Information About Bandaranayake Airport

இவ்வாறான சூழலிலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என தெரியவருகிறது. 

மேலும், "நிலவும் வானிலை காரணமாக விமான அட்டவணைகள் அல்லது தரைவழி நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அதிகாரியொருவர் கூறியதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.