பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்வு

Pakistan World Economic Crisis
By Fathima Jun 03, 2023 12:04 AM GMT
Fathima

Fathima

பாகிஸ்தானில் பணவீக்கம் 38 சதவீதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் உணவுப் பொருட்களின் விலை, வீட்டு வாடகை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து சார்ந்த கட்டணம் என்பன உயர்ந்துள்ளது. 

கடந்த ஏப்ரலில் அந்த நாட்டின் பணவீக்கம் 36.4 சதவீதமாக இருந்த சூழலில் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

அதன் காரணமாக கடந்த மே, 2022 உடன் மே, 2023 ஒப்பிடும்போது நுகர்வோர் பொருட்கள் மீதான விலை கிராமப்பகுதியில் 52.4 சதவீதம் என்ற அளவிலும், நகர பகுதிகளில் 48.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்வு | Inflation Pakistan Overtakes Sri Lanka

நிதி மாற்றங்கள்

மேலும் நடப்பு ஜூனில் இது குறையலாம் என எதிர்பார்ப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணவீக்க சதவீதம் இலங்கையை விட அதிகமாகும்.கடந்த மே மாதத்தில் இலங்கையில் இந்த எண்ணிக்கை 25.2 சதவீதமாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியத்துக்குத் தேவையான வகையில் மேற்கொள்ளப்பட்ட நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது.