நாட்டின் பணவீக்கம் மேலும் வீழ்ச்சி
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Inflation
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Fathima
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 12 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஜூன் மாதத்தில் உணவு வகை பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
உணவு அல்லாத பணவீக்கம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மே மாதத்தில் 21.5 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மே மாதத்தில் 27 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் ஜூன் மாதத்தில் 16.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.