நோய் பரவல் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Jun 07, 2023 12:34 AM GMT
Chandramathi

Chandramathi

இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன. தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரியும் மாவட்ட தொற்றாநோய் விழிப்புணர்வு அதிகாரியுமான வைத்தியர் இ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தொற்றா நோய்

இது தொடர்பில் மேலும் கூறுகையில், தொற்று நோய்களினால் வெறும் 8 சதவீத மரணங்களே நிகழுகின்றன.இலங்கையில் 82 சதவீதமான மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன.

நோய் பரவல் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Infection Warning To The Public

ஆனால் தொற்று நோய்க்கு கொடுக்கின்ற கரிசனையை தொற்றா நோய்களுக்கு மக்கள் கொடுப்பதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகம் போன்ற தொற்றா நோய்களினாலேயே நாட்டில் 82 சதவீதமான மரணங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.