கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இருவர் கைது
Bandaranaike International Airport
Sri Lanka
India
By Fathima
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெண்ணும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசா
இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர்.
43 மற்றும் 39 வயதான இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.