டுபாயில் இந்திய விமானம் எரிந்து விபத்து!

Dubai Accident Flight
By Fathima Nov 21, 2025 01:36 PM GMT
Fathima

Fathima

டுபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானியொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து

வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய போர் விமானம் கீழே விழுந்து வெடித்த சிதறி தீப்பற்றி எரிந்தது.

விமான சாகசங்களை நேரில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முந்தைய நாள் தேஜஸ் போர் விமானத்தில் எரிபொருள் கசிந்ததாக கூறப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தில் இருந்த விமானியின் நிலை குறித்த தகவல் வெளியாகவில்லை. பொதுமக்கள் இல்லாத பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விசாரணை குழு

இதுபற்றி இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில்,

டுபாயில் இந்திய விமானம் எரிந்து விபத்து! | Indian Plane Crashes Demonstration Dubai Air Show   

"டுபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானப் படையின் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். அவரது இழப்புக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது, இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருடன் இந்திய விமானப்படை துணை நிற்கிறது.

விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளது.

கடந்த 2 நாட்களாக டுபாய் கண்காட்சியில் தேஜஸ் விமானம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. இன்றைய அட்டவணையில் தேஜஸ் விமானம் 3 ஆவதாக இடம்பெற்றிருந்தது.

தேஜஸ் விமானத்தைப் பார்க்க பார்வையாளர்கள் அதிகம் கூடியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் மக்கள் யாரும் இல்லை. அதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.