பிரித்தானியாவில் இந்திய சிறுமி மாயம்: தொடரும் தீவிர விசாரணை

By Rukshy Jun 15, 2024 05:24 PM GMT

பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயது இந்திய சிறுமி காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எசெக்ஸ் காவல் நிலையத்திற்கு உற்பட்ட பகுதியில், நேற்று இவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர தேடுதல் 

பிரித்தானியாவின் எசெக்ஸ், பென்ஃப்லீட் பகுதியில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளில் ஒருவரான அனிதா கோசி (Anita Kosi) என்பவரே காணாமல்போயுள்ளர்.

பிரித்தானியாவில் இந்திய சிறுமி மாயம்: தொடரும் தீவிர விசாரணை | Indian Girl Missing In Britain

அனிதாவை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர் எசெக்ஸ் பகுதியில் இருந்து தொடருந்தில் லண்டன் திரும்பியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.