கனடா விசா சேவை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு
கனடாவில் இருந்து தொழில் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை அக்டோபர் 26 முதல் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரகங்களில் குறித்த விசா சேவைகள் ஆரம்பிக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா குற்றஞ்சாட்டியிருந்தது.
விசா சேவை
இதையடுத்து இந்திய தூதர்களை வெளியேற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக இந்தியாவில் இருந்து கனடா தூதர் வெளியேற்றப்பட்டார்.
கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை அக்டோபர் 26 முதல் இந்தியா ஆரம்பிக்க உள்ளது.