இலங்கைக்கு இந்தியாவின் அடுத்த உதவி
இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதில் சலுகை கடன் தொகையாக ரூ.350 மில்லியன் மற்றும் மானியமாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இன்று காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடனான கலந்துரையாடலின் விவரங்களை வெளிப்படுத்திய அவர், இலங்கையில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
“பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய கடிதம், அவசர நிலைகளில் முதல் பதிலளிப்பாளராக இந்தியா செயல்படும் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. அதன்படி, இலங்கைக்காக 450 மில்லியன் டொலர் மறுசீரமைப்பு உதவித் தொகுப்பு வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உறுதியை எவ்வாறு விரைவாக நடைமுறைப்படுத்தலாம் என்பதே எங்கள் கலந்துரையாடலின் மையமாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
My remarks alongside FM @HMVijithaHerath of Sri Lanka in Colombo. #NeighbourhoodFirst #VisionMAHASAGAR
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 23, 2025
🇮🇳 🇱🇰 https://t.co/pj1ORYEqXn
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியா, பொருளாதார நெருக்கடியைப் போன்ற ஒரு நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் முன்னேறியது இயல்பானது என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.