இந்தியா - பாகிஸ்தான் குண்டுவெடிப்பு : இலங்கைக்கு அச்சுறுத்தலா…!
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளால், இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வு சேவைகள் திறம்பட செயல்படுவதாகவும், தற்போது எந்த பாதுகாப்பு கவலைகளும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இலங்கை புலனாய்வு சேவை
இலங்கைக்கு இதுபோன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்த தகவலும் இல்லை. இலங்கையின் புலனாய்வு சேவை தீவிரமாக செயற்படுகிறது. எமது முப்படைகள் மற்றும் காவல்துறை – தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துகின்றன.

எனவே தேசிய பாதுகாப்பு குறித்து எந்த கேள்வியும் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிலைமை சீராக இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.