சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவி: இந்திய வெளிவிவகார அமைச்சர்

International Monetary Fund Sri Lanka Politician Sri Lankan political crisis India
By Fathima May 28, 2023 10:04 AM GMT
Fathima

Fathima

சர்வதேச நாணய நிதியத்தை விட, இந்தியா - இலங்கைக்கு அதிகளவு உதவிகளை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் உள்ள தீவுகள் வளைகுடா நாடுகள் தென்கிழக்காசியாவில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய விஸ்தரிக்கப்பட்ட அயலை உருவாக்குவது குறித்து பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைகழகமொன்றில் மோடியின் இந்தியா எழுச்சி பெறும் சக்தி என்ற கருப்பொருளில் உரையாற்றும் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவி: இந்திய வெளிவிவகார அமைச்சர் | India Helped Srilanka More Than Imf

இந்திய வெளிவிவகார அமைச்சர்

மேலும் அவர் கூறியுள்ளதாவது, தொடர்புகளும் அண்டை நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையும் மாற்றமடைந்துள்ளன.

இலங்கையில் கடந்த வருடத்தில் இடம்பெற்ற விடயங்களை விட வேறு எதுவும் வியத்தகு விதத்தில் இதனை வெளிப்படுத்த முடியாது.

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவி: இந்திய வெளிவிவகார அமைச்சர் | India Helped Srilanka More Than Imf

இலங்கை கடந்த வருடம் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டவேளை முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நாங்கள் உதவினோம்.

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு உதவியதை விட நாங்கள் அதிகளவு உதவியுள்ளோம்.

செல்வாக்கு மிக்க இந்தியா

உங்களில் எவரேனும் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தால் இந்த உதவியால் இந்தியா குறித்து மாற்றமடைந்துள்ள கருத்தினை அவதானிக்க முடியும்.

நாங்கள் இன்று பெரிய இலட்சியம் மிக்க செல்வாக்கு மிக்க இந்தியாவிற்காக முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எங்கள் அயல்களை விஸ்தரிக்க முயல்கின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்தை விட இந்தியா இலங்கைக்கு அதிகளவு உதவி: இந்திய வெளிவிவகார அமைச்சர் | India Helped Srilanka More Than Imf

நாங்கள் இந்த விஸ்தரிக்கப்பட்ட அயல் எவ்வாறானதாகயிருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆராய்கின்றோம், அது இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளாக இருக்கலாம், தென்கிழக்காசியா வளைகுடாவில் உள்ள நாடுகளாகயிருக்கலாம்.

ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுடான உறவுகள் பெருமளவு மாறியுள்ளன. அத்துடன், எங்கள் அயலை பற்றிய மிகவும் சுருக்கப்பட்ட பார்வையிலிருந்து நாங்கள் இலட்சியம் மிக்க பார்வையை நோக்கிமாறியுள்ளோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.