இந்தியாவில் இருந்து இருபத்தி இரண்டு தொடருந்து எஞ்சின்கள் அன்பளிப்பு
இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு இருபத்தி இரண்டு டீசல் எஞ்சின்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அதற்கான வாக்குறுதியை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
61.5 மில்லியன் அமெரிக்க டொலர்
அதற்கு மேலதிகமாக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவின் முதலீடுகளை எதிர்வரும் காலங்களிலும் இலங்கையில் மேற்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் ஆகியோர் பரஸ்பரம் கருத்துப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.