முடங்கிய திட்டங்கள் கடன் மறுசீரமைப்பினால் மீண்டும் உயிர்பெறும்! இந்திக்க அனுருத்த

Government Of Sri Lanka President of Sri lanka
By Mayuri Jul 04, 2024 01:00 PM GMT

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த கால நெருக்கடியின் போது முடங்கிய திட்டங்கள் கடன் மறுசீரமைப்பினால் மீண்டும் உயிர்பெறும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (04.07.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

சீர்குலைக்கும் நடவடிக்கை

மேலும் தெரிவிக்கையில், நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியில் உள்ள சில தரப்பினர் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முடங்கிய திட்டங்கள் கடன் மறுசீரமைப்பினால் மீண்டும் உயிர்பெறும்! இந்திக்க அனுருத்த | Indhika Anurudha Statement

கடந்த கால நெருக்கடி நிலையின் போது வலுசக்தித் துறை தொடர்பான பல திட்டங்கள் முடங்கின.

ஆனால் தற்போது இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்புக்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW