ஐக்கிய மக்கள் சக்தியுடன் சுதந்திரக் கட்சி ஒப்பந்தம் கைச்சாத்து!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) ஆதரவளிப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party )தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (United People's Freedom Alliance) ஐக்கிய மக்கள் சக்தியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் இன்று காலை (07) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொள்கையளவிலான 25 விடயங்கள் அடங்கலாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |