செந்தில் தொண்டமான் தலைமையில் கிழக்கில் சுதந்திர தின நிகழ்வுகள்

Independence Day Sri Lanka Senthil Thondaman
By Mayuri Feb 04, 2024 12:45 PM GMT
Mayuri

Mayuri

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு வெபன் மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வருகையுடன் ஆரம்பமான நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இலங்கையில் வாழும் நான்கு தேசிய இனத்தவரின் வரவேற்பும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அளிக்கப்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் அணிவகுப்புகளும் இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து பேண்ட் வாத்தியங்கள், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

சுதந்திர நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக இந்தியா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அப்துல்லா கலந்து கொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸ் மா அதிபர், முப்படையினர், பிரதம செயலாளர், அரசாங்க அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery