பொதுத் தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 537 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 180 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 357 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 57 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள்
இந்த நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 412 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 125 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |