ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka sri lanka presidential election 2024
By Laksi Sep 16, 2024 08:49 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 15ஆம் திகதி வரை 4215 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1360 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 2855 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை! பாதுகாப்பு அமைச்சு

தேர்தல் முறைப்பாடுகள்

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு | Increasing Election Complaints

இதேவேளை, இதுவரையில் தங்களது கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 3,641 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எஞ்சிய 574 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புத்தளத்தில் பெருமளவான பீடி இலை பொதிகள் மீட்பு

புத்தளத்தில் பெருமளவான பீடி இலை பொதிகள் மீட்பு

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் : சஜித் பிரேமதாச தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW