உயரும் அமெரிக்க டொலரின் பெறுமதி
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (20) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த வாரம் முழுவதும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சற்று தளம்பல் காணப்பட்ட நிலையில், தற்போது வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 301.30 ரூபாவாகவும், கொள்வனவு விலை 292.72 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலரின் பெறுமதி மாற்றம்
அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 213.09 ரூபாவாகவும், கொள்வனவு விலை 204.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 315.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 303.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 380.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 366.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 193.23 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 184.02 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 226.36 ரூபாவாகவும் ஆகவும், கொள்வனவு பெறுமதி 216.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 2.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 1.93 ரூபாய் எனவும் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |