உயர்வடைந்துள்ள மரக்கறிகளின் விலை
மலையகப் பகுதிகளிலிருந்து தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை இன்று (15) உயர்வடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1,000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாழ்நிலப் பகுதி மரக்கறிகளின் விலையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விலையில் மாற்றம்
அத்துடன், ஒரு கிலோ தக்காளி மற்றும் எலுமிச்சையின் மொத்த விலை சுமார் 80 ரூபாயாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், ஒரு கிலோ பாகற்காய் மொத்த விற்பனை விலை 450 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கத்தரிக்காய் 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீர்க்கங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |